Dindigul Hospital
Emergency
NABH ACCREDITED HOSPITALS

கடுமைமையான கால்சியம் படிவால் ஏற்பட்ட இருதய அடைப்புக்கு OCT வழிகாட்டலுடன் கூடிய IVL CHIP சிகிச்சை: மதுரை வடமலையான் மருத்துவமனை சாதனை !

மதுரை வடமலையான் மருத்துவமனையின் இருதயவியல் துறை (Department of Cardiology), மிகவும் சிக்கலான மற்றும் உயர் ஆபத்துக்கொண்ட இருதய நோய் (Complex Higher-Risk and Indicated Patient – CHIP) உடைய 71 வயது மூத்த மருத்துவ நிபுணர் ஒருவருக்கு, OCT வழிகாட்டலுடன் கூடிய இன்ட்ராவாஸ்குலார் லித்தோத்ரிப்ஸி (IVL) சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு புதிய மருத்துவ மைல்கல்லை எட்டியுள்ளது.

சிக்கலான இருதய நோய் மற்றும் சவால்கள்

மருத்துவப் பரிசோதனை மற்றும் Coronary Angiogram ஆய்வில், நோயாளியின் இருதய ரத்தக்குழாய்களான LAD மற்றும் LCX இரண்டிலும் கடுமையான கால்சியம் படிவு (Severe Deep Calcification) இருப்பது கண்டறியப்பட்டது.

ரத்தக்குழாயின் உட்பகுதியில் 270°-க்கும் மேல் மிகக் கடினமாகப் படிந்திருந்த இந்த Deep Calcium Deposits-னால், சாதாரண பலூன் அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முறைகள் மூலம் அடைப்பைச் சீரமைப்பது மிகவும் சவாலானதாக இருந்தது.

OCT இமேஜிங் மற்றும் IVL தொழில்நுட்பம்

இந்தச் சிக்கலான சூழலை எதிர்கொள்ள, வடமலையான் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் அதிநவீன OCT (Optical Coherence Tomography) இமேஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர்.

இதன் மூலம் ரத்தக்குழாயின் உட்பகுதியை மிகத் துல்லியமாக ஆய்வு செய்து, கால்சியம் படிவின் ஆழம் மற்றும் தடிமனை அளவிட்டனர்.

தொடர்ந்து, Intravascular Lithotripsy (IVL) தொழில்நுட்பத்தின் மூலம் ஒலி அழுத்த அலைகளை (Acoustic Pressure Waves) செலுத்தி, ரத்தக்குழாயின் சுவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் கடினமான கால்சியம் படிவுகள் உடைக்கப்பட்டன.

இதன் மூலம் ரத்தக்குழாய் மீண்டும் விரிவடையும் தன்மையைப் பெற்றதுடன், ஸ்டென்ட் (Stent) கச்சிதமாகப் பொருத்தப்பட்டு, இருதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீரமைக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த மருத்துவக் குழுவின் வெற்றி

இச்சாதனை குறித்து வடமலையான் மருத்துவமனையின் முதன்மை இருதய சிகிச்சை நிபுணர் Dr. S. Sathish Kumar, M.D., D.M., Consultant Cardiologist அவர்கள் தெரிவித்ததாவது:

“இத்தகைய சிக்கலான இருதய அடைப்புகளுக்கு அதிநவீன தொழில்நுட்பம் மட்டுமின்றி, துல்லியமான திட்டமிடல் மற்றும் மருத்துவக் குழுவின் ஒருங்கிணைந்த செயல்பாடும் மிகவும் அவசியமாகும். OCT மற்றும் IVL தொழில்நுட்பங்களை இணைத்துப் பயன்படுத்தியதன் மூலம், இச்சிகிச்சை பாதுகாப்பாகவும் துல்லியமாகவும் நிறைவு பெற்றுள்ளது.”

இச்சிகிச்சையை முதன்மை இருதய சிகிச்சை நிபுணர் Dr. S. Sathish Kumar, M.D., D.M., Consultant Cardiologist அவர்களின் தலைமையில், இருதயவியல் குழுவைச் சேர்ந்த Dr. R. Sasinthar, M.D., D.M., Consultant Interventional Cardiologist மற்றும் Dr. Suresh Kumar Sukumaran, MBBS., MD (General Medicine), DM (Cardiology), PDF (Cardiac Electrophysiology and Pacing) (JIPMER), Consultant Cardiac Electrophysiologist and Interventional Cardiologist ஆகியோர் இணைந்து வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளனர்.

தென் தமிழகத்தில் உள்ள நோயாளிகளுக்கு சர்வதேசத் தரத்திலான நவீன இருதய சிகிச்சை சேவைகளை வழங்குவதில் வடமலையான் மருத்துவமனை தொடர்ந்து முன்னணியில் திகழ்கிறது என்பதை இந்த வெற்றி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required