வடமலையான் மருத்துவமனையில் வெற்றிகரமாக நடைபெற்ற கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை
மதுரை, மே 2025 – உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயது நோயாளிக்கு, மதுரை வடமலையான் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் முழுமையாக குணமடைந்து, ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்.
கான்பூரைச் சேர்ந்த அனுபவ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கல்லீரல் முற்றிலும் செயலிழந்த நிலையில், சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருடைய குடும்பத்தில் கல்லீரல் தானம் செய்ய ஏற்ற நபர் இல்லாததால், மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புத் தானம் மூலம் கல்லீரல் கிடைப்பதற்காக, வடமலையான் மருத்துவமனையின் ஒருங்கிணைப்பில் ஒரு மாத காலமாகக் காத்திருந்தார்.
இந்நிலையில், தானம் செய்யப்பட்ட கல்லீரல் கிடைத்ததும், அண்மையில் வடமலையான் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்தப் பெரிய அறுவைச் சிகிச்சையை சென்னை க்ளீனீகிள்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் மற்றும் வடமலையான் மருத்துவமனை மருத்துவர்கள் இணைந்து திறம்பட மேற்கொண்டனர்.
- Dr. N.R. Venkatesh (MS, MCh – SGE)
- Dr. D. Alvin James (MD, DM – MGE)
- மயக்கவியல் நிபுணர்கள் Dr. G. Madhuri (MD), Dr. K. Anbarasu (MBBS, DA)
அறுவைச் சிகிச்சைக்குப் பின் 10 நாட்களில், நோயாளிக்குப் பொருத்தப்பட்ட கல்லீரல் சிறப்பாக செயல்பட்டு, உடல்நிலையில் கணிசமான முன்னேற்றம் காணப்பட்டது. தற்போது அவர் பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ளார்.
நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினர்,
“எங்களுக்கு புதிய வாழ்வை அளித்த வடமலையான் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் முழு குழுவினருக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்,”
என்று தெரிவித்தனர்.