Dindigul Hospital
Emergency
NABH ACCREDITED HOSPITALS

85 வயதிலும் இதயத்திற்கு புதிய உயிர்: IVUS Guided Rotablation மூலம் Complex Angioplasty வெற்றி

85 வயதிலும் இதயத்திற்கு புதிய உயிர்!

IVUS வழிகாட்டலின் துல்லிய மதிப்பீடு and Rotational atherectomy மூலம் Complex Angioplasty -ஐ வெற்றிகரமாக சிகிச்சையளித்த Vadamalayan Hospitals, Dindigul

“வயது என்பது ஒரு எண் மட்டுமே… சரியான சிகிச்சை கிடைத்தால் 85 வயதிலும் இதயத்தை பாதுகாக்க முடியும்” என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது இந்த அரிய மருத்துவ சாதனை.

85 வயதுடைய வேடசந்தூர் பகுதியை சேர்ந்த முதியவர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் (Hypertensive & Diabetic) வரலாற்றுடன் திடீர் chest pain மற்றும் சில நொடிகள் loss of Consciousness ஏற்பட்டதை தொடர்ந்து வடமலையான் ஹாஸ்பிடல் திண்டுக்கல்லில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ECG, Cardiac Evaluation ஆகியவற்றின் மூலம் அவருக்கு Acute Coronary Syndrome (ACS) – Unstable Angina இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Coronary Angiogram-ல் தெரியவந்த மிகப்பெரிய சவால்

அவருக்கு செய்யப்பட்ட Coronary Angiogram-ல், இதயத்திற்கு இரத்தம் கொண்டு செல்லும் மூன்று ரத்த நாளங்களிலும் பாதிப்பு (Triple Vessel Disease) இருப்பது கண்டறியப்பட்டது.

குறிப்பாக, Right Coronary Artery (RCA) எனப்படும் வலதுபுற இரத்த நாளியில் பல இடங்களில் தீவிரமான அடைப்புகள் இருந்தன. இந்த இரத்த நாளியில் இருந்த தீவிர அடைப்பே அவரது வலி மற்றும் தொந்தரவுகளின் முக்கிய காரணமாகவும் கண்டறியப்பட்டது.

அதிலும், வயதின் காரணமாக இரத்த நாளத்தின் சுவர்களில் Heavy Calcification – கடுமையான கால்சியம் படிவு காணப்பட்டது.

இந்த வகை கால்சியம் படிவு இருக்கும் போது, சாதாரண Balloon Angioplasty மூலம் அடைப்பை விரிவுபடுத்துவது மிகவும் கடினம். மேலும், Stent சரியாக விரியவில்லை என்றால்,

– Stent Thrombosis (ரத்த உறைவு)
– Early In-Stent Restenosis (மீண்டும் விரைவில் அடைப்பு)

போன்ற உயிருக்கு ஆபத்தான சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.

ஏன் Rotablation தேவைப்பட்டது?

ரத்த நாளத்தில் heavy calcification (தீவிரமான சுண்ணாம்பு படிவு) இருந்ததால் ஏற்பட்ட தீவிர அடைப்பினால், மிகச் சிறிய ஆஞ்சியோ பிளாஸ்டி பலூன் செல்வதற்கும் வழி இல்லாமல் இருந்தது (balloon uncrossable). இந்த சிக்கலான சூழ்நிலையில், Calcium Modification செய்வதற்காக Rotational Atherectomy (Rotablation) என்ற உலகத் தரம் வாய்ந்த நவீன சிகிச்சை தேர்வு செய்யப்பட்டது.

Rotablation என்பது அதிவேகத்தில் சுழலும் சிறப்பு கருவியின் உதவியுடன், ரத்த நாளியில் படிந்துள்ள கடினமான கால்சியத்தை அரைத்து அகற்றும் உயர் நுட்ப சிகிச்சையாகும்.

இதன் மூலம் Stent முழுமையாக விரிவடைய தேவையான இடம் உருவாக்கப்படுகிறது.

IVUS Guidance – துல்லியமான சிகிச்சைக்கு மேம்பட்ட தொழில்நுட்பம்

இந்த சிகிச்சை முழுவதும் Intracoronary imaging (ரத்த நாளியில் பார்க்கக்கூடிய கேமரா போன்ற கருவி) – Intravascular Ultrasound (IVUS) வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளப்பட்டது.

IVUS மூலம்,

– கால்சியம் எந்த அளவிற்கு உள்ளது?
– அது 360° முழுவதும் பரவியுள்ளதா?
– Rotablation-க்கு பிறகு கால்சியம் எவ்வளவு குறைந்துள்ளது?
– Stent சரியாக விரிந்துள்ளதா?

என்பதை நேரடியாக ரத்த நாளின் உள்ளே இருந்து துல்லியமாக மதிப்பிட முடிகிறது.

இதனால் சிகிச்சையின் பாதுகாப்பும், வெற்றியும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கிறது.

மிகவும் சிக்கலான Case… ஆனால் வெற்றிகரமான முடிவு

85 வயது முதியவர், Triple Vessel Disease, கடுமையான Calcification, Rotablation போன்ற பல சவால்கள் இருந்தபோதிலும், Dr. Vignesh Kumar M தலைமையிலான Interventional Cardiology குழு, சுமார் 2 மணி நேரம் நீண்ட இந்த உயர் நுட்ப சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

Rotablation மூலம் Calcium Burden குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டு, பின்னர் Right Coronary Artery-யில் 2 Drug-Eluting Stents வெற்றிகரமாக பொருத்தப்பட்டன. IVUS மூலம் Stent Expansion சிறப்பாக உறுதி செய்யப்பட்டது.

விரைவான மீட்பு

சிகிச்சைக்கு பின் நோயாளி உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டார். வெறும் 2 நாட்களில் வீடு திரும்பி, தற்போது ஆரோக்கியமாக இயல்பான வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார்.

Vadamalayan Hospitals, Dindigul – Advanced Cardiac Care அருகிலேயே

முன்னர் பெரிய நகரங்களில் மட்டுமே கிடைத்த Rotablation, IVUS Guided Complex Angioplasty போன்ற உயர்நிலை இதய சிகிச்சைகள், தற்போது Vadamalayan Hospitals, Dindigul-ல் வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருகின்றன.

உயர்தர Cath Lab, நவீன Imaging Technology, அனுபவமிக்க Interventional Cardiology குழு மற்றும் நோயாளி மையப்படுத்தப்பட்ட சிகிச்சை ஆகியவை, தென் தமிழ்நாட்டு மக்களுக்கு உலகத் தர மருத்துவ சேவையை அவர்களது மாவட்டத்திலேயே கிடைக்கச் செய்கின்றன.

மருத்துவரின் கருத்து

“வயது என்பது சிகிச்சையைத் தவிர்க்க வேண்டிய காரணமல்ல. நோயாளியின் உடல்நிலையை சரியாக மதிப்பிட்டு, சரியான தொழில்நுட்பம் மற்றும் அனுபவத்துடன் அணுகினால், மிகவும் சிக்கலான இதய சிகிச்சைகளையும் பாதுகாப்பாக மேற்கொள்ள முடியும்.”

Dr. Vignesh Kumar M

MBBS., MD (Internal Medicine – Madras Medical College), DM (Cardiology – SJIC&R)
Consultant Interventional Cardiologist
Vadamalayan Hospitals, Dindigul

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required